டஸ்கானா... கமல்ஹாஸன் தொடங்கி நமீதா வரை தமிழ் சினிமா நடிசத்திரங்கள் அடிக்கடி வந்து போகும் சென்னையின் மிகப் பிரபலமான உணவகம் இது. வித விதமான இத்தாலிய உணவுகளை இங்கே சுவைக்கலாம். பீஸாக்களில் இத்தனை புது வெரைட்டியா என வியக்கலாம்.இந்த உணவகத்துக்கு இப்போது ஒரு புதிய பெருமை கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற Miele Guide என்ற அமைப்பு, ஆசியாவின் மிகச் சிறந்த 300 உணவகங்களுள் ஒன்றாக டஸ்கானாவைத் தேர்வு செய்துள்ளது.
இந்த உணவகத்தின் பல்வேறு சிறப்புகள், வாடிக்கையாளர் திருப்தி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பெருமைக்குரிய பட்டியலில் இடம் கொடுத்துள்ளது மிலே கில்டு அமைப்பு.
இதுகுறித்து இந்த உணவகத்தின் நிர்வாக இயக்குநர் விபின் சச்தேவ் கூறுகையில், "இந்த பட்டியலில் இடம் பெறுவது சாதாரண விஷயமல்ல. எங்கள் கடினமான உழைப்புக்கும் நேர்மையான வாடிக்கையாளர் சேவைக்கும் கிடைத்த பரிசு இது. இதனைக் கொண்டாடும் வகையில் டஸ்கானாவில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு மெயின் மெனுவுடன் ஒரு டெஸர்ட் இலவசமாகத் தர திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 10ம் தேதி வரை இந்த சலுகை உண்டு" என்கிறார்.
இந்த உணவகத்தின் தலைமை செப் வில்லி இத்தாலிக்காரர், மகா திறமைசாலி. 6 மாதங்களில் அனைத்து ஐயிட்டங்களையும் மாற்றி மாற்றி வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சுவைகளில் பீஸாக்களைத் தருவபர். டஸ்கானாவின் இயக்குநரும் கூட. "சென்னை மக்கள் டஸ்கானாவுக்கு அளித்துள்ள வரவேற்பு வியக்க வைக்கிறது. நன்றி" என்கிறார்.
2009- நம்பர் மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாலஸ் கார்டனில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம், அடுத்த 3 மாதங்களில் சிறந்த இத்தாலியன் உணவகத்துக்கான டைம்ஸ் ஆப் இநிதியா விருதினைப் பெற்றது. இப்போது ஓராண்டு பூர்த்தியான நிலையில் ஆசியாவின் சிறந்த உணவகங்களுள் ஒன்றாக சிறப்புத் தகுதி பெற்றதுள்ளது.
டஸ்கானாவை நடத்தும் விபின்தான், சென்னையின் பிரபலமான சப்வே, க்ரிப்டாஸ் மற்றும் பிரஸ்கோ ரெஸ்டாரன்ட்களை நடத்துகிறார்.

No comments:
Post a Comment