Tuesday, November 30, 2010

உதயநிதிக்கு ஜோடி ஸ்ருதி?



தமிழில் இப்போது ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக நடித்து வரும் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி, அடுத்து உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழாம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார், நண்பேன்டா படத்தில். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படமாகும்.

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடற்பயிற்சி, நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி என பல பயிற்சிகளில் மும்முரமாக உள்ளார் உதயநிதி.

நண்பேன்டா படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாஸன் என தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்குமாறு ஸ்ருதியிடம் கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம். பெரும் தொகை அவருக்கு சம்பளமாகத் தரப்படவிருக்கிறதாம்

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை-விரைவில் அரசியல்?






சென்னை: இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்குச் சொந்தமான ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய்.

மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். 

சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.

அவரிடம் பேசிய நிர்வாகிகள், பொங்கல் பண்டிகைக்குள் அரசியலுக்கு வந்து விடுமாறு விஜய்யை வற்புறுத்தினராம். இந்த நிலையில்தான் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் வரவழைத்து ஆலோசனைநடத்தியுள்ளார் விஜய். எனவே விரைவில் அவரது அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

Monday, November 29, 2010

தமிழ் சினிமாவில் நடிக்கிறார் எதியூரப்பா!!

அரசியல் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, இப்போது நிஜமாகவே சினிமாவிலும் நடிக்கப் போகிறாராம். கன்னடத்தில் அல்ல... தமிழ்ப் படத்தில்!

பூலோக ரக்ஷகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அய்யப்பன் புகழ் பாடும் பக்திப் படம். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எதியூரப்பா.

இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொருவர் சபரிமலை கோயிலின் தர்மாதிகாரி மகன் பிரம்மதத்தன். 

பூலோக ரக்ஷகன் படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது, எதியூரப்பா நடிப்பதால் அல்ல... ஒரு பாடலை 200 பாடகர்கள் பாடியிருப்பதற்காக. இந்தப் பாட்டை 50 பாடலாசிரியர்கள் உருவாக்கியுள்ளனராம். 

விஷயம் தெரிய வந்ததிலிருந்து, 'அரசியலைப் போலவே, சினிமாவிலும் நடிப்பில் அசத்துவார் எதியூரப்பா என்பதில் சந்தேகமில்லை என கிண்டலாக கமெண்ட் அடிக்கிறார்களாம் சொந்த பாஜகவினரே!

Sunday, November 28, 2010

திரிஷா-மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீடு

சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் திரிஷா. காரணம், கமல். அவருடன் சேர்ந்து நடித்துள்ள மன்மதன் அம்பு படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் திரிஷா. 

படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு கமல்ஹாசனையும் வெகுவாகப் புகழ்கிறார். குறிப்பாக சிங்கப்பூரில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தான் பாடல் பாடியதையும், கமலுடன் இணைந்து கவிதை வாசித்ததையும் கூறி சிலாகிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன் தான் என்னிடம் அக்கறை காட்டி பாடவும், கவிதை வாசிக்கவும் ஊக்கம் கொடுத்தார். இதனால்தான் என்னால் அதை சிறப்பாக செய்ய முடிந்தது. இதனால் என்னைப் பொறுத்தவரை கமல் சார் ஒரு குரு.

இப்படத்தில் நான் வளரும் நடிகையாக நடித்துள்ளேன். சரியான ரொமான்டிக் காமெடி இது என்றார் திரிஷா.

திரிஷா இப்போது அஜீத்துடன் மங்காத்தா, தெலுங்கில் வெங்கடேஷுடன் சாவித்திரி ஆகிய படங்களில் 
நடித்து வருகிறாராம்.
சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ..

இலியானா ====== கரீனா கபூர்

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.

இதற்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகியாக இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார்.

தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார். 



இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா. 







இந்தியில் பெரும் வெற்றி [^] பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் [^] , தெலுங்கு [^] ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் [^] 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.இதற்கான கலைஞர்களைத் ..

விஜய்யின் காவலன்... தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்!

சென்னை: விஜய்-அசின் ஜோடியாக நடித்துள்ள காவலன் படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்.

சித்திக் இயக்கியுள்ள காவலன் படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்தனர். 

அதற்கு சரவணனும் சம்மதம் தெரிவித்தார். பின்னர், இந்த தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவலன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி ராஜேஸ்வர் உத்தரவிட்டார்.

எனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் காவலன் வெளியாகிறது.

அசின் நடித்துள்ளதால் இந்தப் படத்தை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.